Wednesday, 28 January 2015

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் (புத்தக விமர்சனம்) - 2


The Dahmer
புத்தகம் முதலில் புகழ்பெற்ற(?!) சீரியல் கொலைகாரர்களைப்பற்றி பேசுகிறது. அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் வாழ்ந்து, பலரைக் கொடூரமாக சித்திரவதைப்படுத்தி கொலைசெய்து, அவர்களின் உடல் உறுப்புக்களை நினைவுச்சின்னங்களாக வைத்திருந்த, கொலையுண்டவர்களின் உடற் பாகங்களை உண்டு ருசித்த கொலைகாரர்களான தி டாமர், ஆண்ட்ரே சிக்காடிலோ, டேவிட் பெர்கொவிஸ் போன்றவர்களைப் பற்றி, அவர்களின் கொலை செய்யும் முறைகள், போலிஸ் அவர்களை கண்டுபிடித்த கதை, அவர்களின் குழந்தைப் பருவ பாதிப்புக்கள் என விரிவாக அலசப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சீரியல் கொலைகாரன் எப்படி உருவாகிறான் என்பதையும் அலசியிருக்கிறது. நம் குழந்தைகளை எப்படி நடத்தக்கூடாது என்பதை விரிவாகச் சொல்கிறது.



அத்துடன், வீட்டுக்கு வீடு காணப்படும், பொதுவாக நம்நாட்டில் அதிகம் காணப்படும் “குரூரமான கணவர்களை”ப் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது. நம்நாட்டில், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்  என இருந்துவிடுவதால், இவ்விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. நம் கலாச்சாரத்தின் உளுத்துப் போன, ஆயிரம் காலத்து திருமண முறையும் இதற்கு பெரிதும் உதவுகிறது. மேலைநாட்டில், இப்படியான ஒரு மிருகத்துக்கு வாழ்க்கைப் பட்ட பெண்ணொருத்தி, கொடுமை தாங்க முடியாமல், வெளிவந்து கோர்ட்டில் சொன்ன விஷயங்களை என்னால் எழுத முடியவில்லை. புத்தகத்தில் வாசித்தால், “எப்படியாச்சும் என் பொண்ணை ஒரு இடத்துல கட்டிக் கொடுத்துட்டேன்னா, என் கடமை முடிஞ்சிடும்” என, வரதட்சிணையும் கொடுத்து, பெண்ணை ஒரு மிருகத்துக்கு கட்டிக்கொடுத்து சந்தோஷப்படும் நம்நாட்டுப் பெற்றோருக்கு கொஞ்சம் புத்தியில் உறைக்கலாம்.

புத்தகத்தின் அடுத்த பகுதி, கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள் மற்றும் அவர்களது அடியாட்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறது. நம்மைப்போல நல்ல மனிதர்களாக, குடும்பத்தவர்களை அரவணைத்து வாழ்ந்த சில இந்துக்கள், கூட்டமாகக் கூடி பம்பாய்க் கலவரத்தில் கர்ப்பவதியான ஒரு முஸ்லிம் பெண்ணின் பிறப்புறுப்பில் கைவிட்டு, கருவை பிய்த்தெடுத்து தீவைத்து கொளுத்த எப்படி மனது வந்தது? நாஜிக்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகம் போவதுபோல புறப்பட்டுச் சென்று, நூற்றுக்கணக்கான யூதர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக் கொன்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து, மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இசை நிகழ்ச்சிகளுக்குப் போனது எப்படி? இதற்குக் காரணம் நாம்-அவர்கள் எனும் சமூகப் பாகுபாடுதான் என விரிவாக விளக்குகிறது.

இத்துடன், மக்களை ஏமாற்றும் பக்தி இயக்கங்கள் பற்றியும், அதன் சைக்காலஜியைப் பற்றியும் புத்தகம் விளக்குகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ எனும் மனநிலையில் மக்கள் சேரும் இவ்வித இயக்கங்களையும், அதில் சில இயக்கங்களில் நடந்த குரூரங்களையும் மதன் விபரிக்கிறார்.

அடுத்ததாக, பரிணாம மனோதத்துவவியலின் (evolutionary psychology) பார்வையில் மனிதனின் கொலை, திட்டமிட்ட கொலை, கற்பழிப்பு போன்றவற்றை ஒத்த நடத்தைகள் நம் உறவினரான சிம்பன்ஸிகளிடம் காணப்படுவதை விளக்குகிறது. கொலை ஏன் தடை செய்யப்பட்டது? திருமணம் ஏன் எல்லாச் சமூகங்களிலும் காணப்படுகிறது? என பல கேள்விகளுக்கு அறிவியல்ரீதியான பதில்கள் இங்கே கிடைக்கின்றன.
ஒரு விதத்தில் மிகச் சுயநலமான, மிக கில்லாடித்தனமான கண்டுபிடிப்பு – திருமணம்! சற்று யோசித்துப் பாருங்கள். உங்களோடு வாழ்ந்து, குழந்தைகள் பெற்றுத் தரக்கூடிய ஒரு பெண்ணை தனியாக விட்டு நீங்கள் நகர்ந்தாலே, நூற்றுக்கணக்கான ஆண்கள் அவளை தூக்கிச்செல்வதற்காக காத்திருகிறார்கள் என்றால் எப்படி இருக்கும்? அவர்களில் பலசாலியான ஒருவன் உங்களை அடித்துத்தள்ளிவிட்டு அவளை அபகரித்துக்கொண்டு போய்விடுவான் என்றால் அந்தப் பெண்ணைவிட்டு நீங்கள் அகல முடியுமா? மற்ற வேலைகள் எதையும் கவனிக்க முடியுமா?


அதாவது, இந்த முக்கியமான பிரச்னைக்கு தீர்வாக: “உன் பெண்ணை நான் தூக்க மாட்டேன். என் பெண்ணை நீ தூக்க கூடாது” என மனிதன் சமூகத்துடன் போட்டுக்கொண்ட ஒரு பரஸ்பர ஒப்பந்தம் (பார்க்க: Social Contract) தான் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணம் என்கிறார் மதன்.

கடைசியாக, ஜனநாயக முறையில் அதிபராக தெரிவுசெய்யப்பட்ட ஹிட்லரும், ஸ்டாலினும் எப்படி குரூரமான சர்வாதிகளாக மாறினார்கள் என்பதை, சமூகவியல், மனோதத்துவியல் காரணங்களைக் காட்டி, அவர்களது சிறுவயது அனுபவங்களையும் கூறி மதன் விளக்குகிறார். இன்று நாம் தெரிவுசெய்யும் எந்த ஒரு அரசியல்வாதியும், சரியான சட்டரீதியான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் குரூரமானவராக ஆகலாம் என்பதை புத்தகம் விளக்குகிறது.


இப்படியாக, மனிதகுலத்தின் வன்முறை வரலாற்றின் ஒரு தெளிவான குறுக்குவெட்டுத் தோற்றமொன்றையும், மனிதனின் பரிணாம மனோதத்துவ வரலாற்றையும் சுவாரஸ்யமாக, 63 பக்கங்களுள் மதன் தந்திருக்கிறார். நான் படித்த மிகச் சிறந்த புத்தகங்களுக்குள் இதுவும் ஒன்று எனக் கூறலாம்.


புத்தகம் PDF வடிவிலும் கிடைக்கிறது. லிங்க் இங்கே: 

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் (புத்தக விமர்சனம்) -1


“எல்லா மனிதர்களுக்கும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம்” - மதன்




பதைபதைக்கவைக்கும் மனித வன்முறையின் உச்சங்களை, அறிவியல்ரீதியான கண்ணோட்டத்தில், துப்பறியும் நாவலைப்போன்ற சுவாரஸ்யமான எழுத்தில், மனோதத்துவவியல், சமூகவியல் பார்வைகளில் வெறும் 63 பக்கங்களில் மதன் அலசியிருக்கிறார். மதனைப் பற்றி தனியாக கூற வேண்டியதில்லை. புகழ்பெற்ற கார்டூனிஸ்ட், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்ட கலைஞர். சுவாரஸ்யம் மட்டும் இல்லாமல், இப்படியான விடயங்களில் சமூகத்தின் பார்வைகளை மாற்றக்கூடிய ஒரு நூலாகவும், படிப்பவர்களுக்கு சில முக்கிய கருத்துக்களைக் கூறும் நூலாகவும் இது வெளிவந்திருக்கிறது. மனோதத்துவம், அறிவியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமில்லாமல், அனைவருமே கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது எனக் கூறலாம். 


American Psycho (ஒரு சீரியல் கில்லரைப் பற்றிய படம்)
இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இதை வாசிப்பதற்கு, மனித வன்முறையின் எல்லைகளைத் தரிசிப்பதற்கு மிகவும் தயங்குவார்கள். படிப்பதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்க, இந்த மனிதத்தோல் போர்த்திய மிருகங்களைப்பற்றி ஏன் மெனக்கட்டு படிக்கவேண்டும் என்று கேட்பார்கள். உண்மையில், இந்தத் தொடர் மனநோயாளிகளைப் பற்றியதல்ல. சராசரி மனிதர்கள் எந்தளவுக்கு கொடூரமான வன்முறையாளர்களாக ஆக முடியும் என விளக்கும் தொடர் இது. இந்தப் புத்தகம் கூறும் செய்தி என்னவென்றால், இப்படிப்பட்ட குரூரமானவர்களுக்கும், நம்மைப் போன்ற பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி ஒரு நூலளவு மட்டும்தான். நம்மில் பலரும் கோபத்தின் உச்சியில், ஒருவித உந்துதலில் “இவனை கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன?” என்று ஒருகணம் யோசித்திருப்போம், ஆனால், சமூக மற்றும் தனிமனித கட்டுப்பாடுகள் காரணமாக யோசிப்பதோடு மட்டுமே நின்றுவிடுகிறோம். இவர்கள், இன்னும் ஒருபடி மேலே போய், அதைச் செயற்படுத்துவதோடு, அதில் இன்பத்தை கண்டு, தொடர்ச்சியாக அவ்வாறு செய்கிறார்கள். ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.

Chikatilo-mugshot.jpgசிக்காடிலோ என்பவர் சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட்ட ரஷ்ய ஆசிரியர். கண்ணியமான உடை, சுமுகமாகப் பழகும் விதம், ரஷ்ய இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு என ஒரு அருமையான மனிதனாக அறியப்பட்டவர். இவர் பன்னிரண்டு வருஷங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பத்து மூன்று பேரை கொலைசெய்தார் (அதுவும் எப்படி? உடலெங்கும் கத்தியால் குத்தி, கண்களைப் பிடுங்கியெடுத்து, பீறிடும் இரத்தத்தை குடித்து, இறந்தவரை கடித்துக் குதறி, அப்புறம் இன்னொன்றும் செய்தார்) என்பதை நம்ப முடியுமா? இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல. ஒரு அருமையான மனிதராக சமூகத்தில் வாழ்ந்தபடியே திட்டம்போட்டு குரூரமாக கொலைகள் செய்தார். இவரைப் போன்ற சீரியல் கொலைகாரர்களையும், சாதாரண மனிதர்களையும் கலந்து உட்கார வைத்துவிட்டு பேச்சுக்கொடுத்தால், மனோதத்துவ மாணவர்களாலேயே இரண்டு தரப்புக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!! அந்தளவுக்கு, நமக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.

அத்துடன், அதே சிக்காடிலோவின் சிறுவயது அனுபவங்களைப் பார்த்தால், அவர்மீது அனுதாபமே மிஞ்சும். அவருடைய சிறுவயதில், உக்ரேனில் கடும் பஞ்சம் நிலவிய நேரம். காட்டுப்பகுதியில் நடந்துவந்த அவனையும் அவன் அண்ணனையும் இடைமறித்த, பஞ்சத்தால் அடிபட்ட ஒரு கூட்டம், அவனது அண்ணனை கொன்று, உடலைத் துண்டாக்கி, தீயில் வறுத்தெடுத்து உண்டதை சிறுவனான சிக்காடிலோ முழுதும் பார்க்க நேர்ந்தது. தந்தை போர்க்கைதியானார். தாயின் அன்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. மனைவியும் அவனை மதிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய ஆண்மையும் பறிபோய்விட்டது. இதிலிருந்தெல்லாம் தப்பிக்க, ஒரு மாய உலகத்தை தனக்குள்ளேயே சிருஷ்டித்தான். மிகக் குரூரமான பாலியல் கற்பனைகளை வளர்த்துக்கொண்டான். பிறகு நடந்ததுதான் மேலே சொன்னது. 

இப்படிப்பட்ட கொலைகாரர்கள் எல்லாருமே காட்டுமிராண்டிக் கலாச்சாரம் கொண்ட மேலைத்தேய நாடுகளில் மட்டும்தான் இருக்கிறார்கள். தொன்மையான கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் எங்களிடம் இந்தப் பிரச்சனை எல்லாம் கிடையாது என்று மார்தட்டத் தேவையில்லை. சீரியல் கொலைகாரர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நம் நாடுகளிலும் இவர்கள் இருந்திருப்பார்கள். என்ன, நம் போலீஸுக்கு இவர்களைக் கண்டறிய திராணி இல்லை. அவ்வளவுதான். இதை மதனே புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

Tuesday, 20 January 2015

The History of the World: Part-I (1981) திரை விமர்சனம்



Parody (நையாண்டி) என்பது ஒரு பிரபலமான இலக்கிய / திரைப்பட வகையாகும். இதுவரை வந்த தமிழ்ப்படங்களின் கிளிஷேக்களை பயங்கரமாக கிண்டலடித்த தமிழ்ப்படம் (2010), ஆங்கில பேய்ப்படங்களை கிண்டலடித்து வெளிவந்த Scary Movie படவரிசை, ஹிந்தி காதல் கதைகளை ஓரளவு பகடிக்குள்ளாக்கிய I Hate Luv Storys (2010), உலகமே பயந்து நடுங்கிய ஹிட்லரை அவரது காலத்திலேயே  நையாண்டி செய்து வெளிவந்த சார்லி சாப்ளினின் The Great Dictator (1940) எல்லாம் மிகுந்த புகழ் பெற்றவை. 

அந்த வகையில், மனித வரலாற்றின் பல பகுதிகளை கலைநயத்தோடு  நையாண்டி செய்து பெருவெற்றி பெற்ற படம்தான் Mel Brooks நடித்து இயக்கிய The History of the World: Part-I. இந்த Mel Brooks என்பவர் ஒரு நையாண்டி ஸ்பெஷலிஸ்ட். அறிவியல் புனைவுகள் முதல் கௌபாய் கதைகள் வரை பல வகைகளை கிண்டலடித்து படங்கள் இயக்கியிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர்.


பதினைந்து கட்டளைகள்!
மனித இனம் உருவானது முதல், கற்கால நிகழ்ச்சிகள், பத்துக் கட்டளைகள் (Ten Commandments), ரோம சாம்ராஜ்ஜியத்தின் நடைமுறைகள், இயேசுவின் கடைசி விருந்து (Last Supper), யூதர்களை சித்திரவதைப்படுத்தி மதமாற்றம் செய்த Spanish Inquisition எனும் புனித இயக்கம், பிரஞ்சுப் புரட்சி எனும் வரலாற்றுப் பாடப்புத்தகத்தின் அத்தியாயங்களெல்லாம் பிரிக்கப்பட்டு வயிறு வலிக்கச் சிரிக்கும்படி நையாண்டி செய்யப்பட்டுள்ளன. 


படம் முழுவதும் பார்த்துப் பார்த்து செதுக்கிய வசனங்கள், பாடல்வரிகள் இருக்கின்றன. ஒரு சோறு பதமாக, இறுதி விருந்தில் இயேசு உரையாற்றும் நேரத்தில் உணவு விடுதியின் பணியாள் குறுக்கிடும்போது நடக்கும் சம்பாஷணை இதோ: 



வரலாற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்து சிரிக்க முடியும். படத்தின் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை முழுதும் ரசித்து சிரிக்கவேண்டுமானால், உரோம அரிச்சுவடி, இயேசுவுக்கு துரோகம் செய்தவனின் பெயர் என்ன, கிரேக்க புராணங்களில் வரும் ஒடீபஸ் (Oedipus) யார், Sammy Davis Jr. யார் என்பது போன்ற கொஞ்ச விஷயங்களும் ஆங்கில வட்டார வழக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் ஒடீபஸின் சோகக்கதையை,  போகிறபோக்கில் ஒரு பொதுவான ஆங்கில கெட்டவார்த்தையில் சொல்லிவிடுவது sheer genius. 

அத்துடன் படத்தின் பெயரில் Part I என இருந்தாலும், படம் பெருவெற்றி பெற்றாலும், படத்தின் இரண்டாம் பகுதி தயாரிக்கப்படவில்லை. காரணம், தலைப்பிலும் ஒரு பகடி இருக்கிறது. மனித வரலாற்றை எழுதுகிறேன் பேர்வழி என எழுத ஆரம்பித்து, முதல் பாகத்தை மட்டுமே வெளியிட்ட பிறகு, தலை வெட்டப்பட்டு இறந்த Sir Walter Raleigh இன் நினைவாகத்தான் The History of the World: Part-I என பெயர் வைக்கப்பட்டதாம். :-D
     


இப்படி தலைப்பில் ஆரம்பித்து, படம் முழுவதும் நையாண்டி காத்திருக்கிறது. இதற்கு மேலும் சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். மிகவும் conservative ஆனவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய மத நம்பிக்கையாளர்கள், ஆங்கில கெட்டவார்த்தைகள் பிடிக்காதவர்கள் படத்தை பார்க்காமல் விடுவதே நல்லது. (படத்துக்கு Restricted ரேட்டிங் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்) மற்றவர்கள், குறிப்பாக வரலாறு தெரிந்தவர்கள் கட்டாயம் பார்த்துச் சிரிக்கவேண்டிய படம். 


My Rating: 9/10

Sunday, 18 January 2015

பார்த்ததில் பிடித்த காணொளிகள் - 1

முடியைப் பிய்க்கவைக்கும் சூத்திரங்களும், கிரேக்க எழுத்துக்களும்  நிரம்பி எக்ஸாமில் வந்திருந்து வெக்டார் டென்சார் என டென்ஷனை ஏற்றும் அறிவியலை, எளிதாக சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வதில் அறிவியல் காணொளிகளுக்கு ஈடு இணை கிடையாது என அடித்துச் சொல்லலாம். அந்தவகையில் இவ்வாரம் பார்த்த வீடியோ தளங்கள், அதில் சுவாரஸ்யமான விடியோக்களின் தொகுப்பு இது.

VERITASIUM (The Element of Truth) 

எம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு அறிவியல் தரும் சிக்கலான பதில்கள் பாமரருக்கும் புரியும்படி மிகவும் சுவாரஸ்யமான, நூற்று எழுபது சிறுசிறு வீடியோக்களாக உருவாக்கி தனது யூடியூப் சானலில் பகிர்ந்திருக்கிறார் Derek Muller. இதோ அவரது ட்ரைலர்:


ஒளி (light) என்றால் என்ன என்று என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா? ஒளி வெறும் தண்ணீர் மாதிரித்தான் செயற்படுகிறது என்பதற்கு அசைக்கமுடியாத ஆதாரம் வழங்கிய, இயற்பியலின் பாதையை திசைதிருப்பிய ஒரு பரிசோதனையை (Young's double slit experiment) கடற்கரையில் வெறும் அட்டைப்பெட்டிக்குள் செய்துகாட்டி பொதுமக்களை வாயடைக்க வைக்கிறார். அந்தக் காணொளி கீழே



வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க (அது எவ்வளவு லாபகரமாக இருந்தாலும்) நாம் எந்தளவுக்கு தயங்குகிறோம்? சில ரிஸ்குகள் தொடர்ந்து தைரியமாக ஈடுபடும்போது  பெரும் லாபத்தை நிச்சயமாக வழங்குகிறன. முதல் ரிஸ்கையே எடுக்கத் தயங்கினால், தொடர்ந்து எப்படி ரிஸ்க் எடுக்கமுடியும்? Psychology, Strategy Theory, Sociology, Economics போன்ற துறைகளில் ஆராயப்படும் விஷயத்தை ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு பொதுமக்களிடமே இவர் செய்துகாட்டுகிறார். அந்தக் காணொளி கீழே


ஒரு எளிய, அருமையான சிந்தனை விளையாட்டின்  மூலம் அறிவியல் சிந்தனை எப்படி இயங்குகிறது என்பதை புரியவைக்கிறார். காணொளியைப் பார்ப்பவர்களும் இதை சுவாரஸ்யமாக விளையாடலாம். அந்தக் காணொளி கீழே...


"Does Quantum Entanglement defy Relativity?" என்பதில் ஆரம்பித்து, "Why everything is Random?" என்பதுவரை எக்கச்சக்கமான (171) வீடியோக்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் அருமையிலும் அருமை. எல்லாவற்றையும் இங்கே பார்க்கலாம்.

TedEd Videos

இவர்களைப்பற்றி உலகத்துக்கே தெரிந்திருந்தாலும் எனக்குத் தெரிந்ததென்னவோ இவ்வாரம்தான். இவர்கள் சிக்கலான அறிவியல் எண்ணக்கருக்களை சுவாரஸ்யமான அனிமேஷன்களாக செய்து தருகிறார்கள்.

மனித உடலிலேயே மிகவும் சிக்கலான உறுப்புக்களில் ஒன்றான கண், எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சியில் உருவாகியது என்பதை இங்கே விளக்குகிறார்கள். ஒளி தன்மேல் விழுவதை உணரக்கூடிய எளிய செல்கள் ஏன், எப்படி குழிவாகி, கண்ணாகி, ஒளிவில்லையுடன் கூடிய தற்போதைய தோற்றத்துக்கு வந்தன என சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் விளக்குகிறார்கள். காணொளி கீழே



அப்பாவின் பேச்சை கேட்காமல் இயற்பியல் படிக்கப்போன ஒருவருக்கு படிப்பு முடிந்தும் வேலை கிடைக்கவில்லை. வாழ்க்கையில் தோல்வியடைந்து சாதாரண க்ளார்க் (எழுதுவினைஞர்) வேலையில் சேர்கிறார். திடீரென ஒரே வருடத்தில் (1905) நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை மளமளவென்று எழுதி வெளியிடுகிறார். அவை சும்மா கட்டுரைகள் அல்ல. இயற்பியலின் அஸ்திவாரத்த்தை நான்கு மூலைகளில் வெடிவைத்துத் தகர்த்த, உலகம் பற்றிய அறிவியலின் புரிதலை நான்கு வெவ்வேறு தளங்களில் புரட்டிப்போட்ட புரட்சிக் கட்டுரைகள். ஒரு சாதாரண மேஜை கிளார்க் ஒரே வருடத்தில் இயற்பியலை புரட்டியது எப்படி? அது சாத்தியமா? அதனால்தான் 1905 ஆம் வருடத்தை Einstein's Miracle Year (Annus Mirabilis) என அழைக்கிறார்கள். (சொல்ல மறந்துவிட்டேன்.. அந்த மேஜை கிளார்க் தான் நம் ஐன்ஸ்டைன்.) :-)

நான்கில் ஒரு கட்டுரை (Brownian Motion) அணுக்களின் இருப்பை சந்தேகமின்றி உறுதிசெய்து Statistical Mechanics இலும் புரட்சி செய்தது. அடுத்த கட்டுரை (Photoelectric Effect) இருநூறு வருடங்களாக நம்பப்பட்ட "ஒளி ஒருவித அலை" என்பதை தகர்த்தெறிந்து 'ஒளி துகள்களாகவும் செயற்படுகிறது' என்றதோடு  பிற்காலத்தில் நோபல் பரிசையும் பெற்று, இன்றும் பல விஞ்ஞானிகளின் மொட்டைத்தலைக்கு காரணமாகும் குவாண்டம் அறிவியலையும் ஒருவகையில் தொடக்கிவைத்தது.  இன்னொரு கட்டுரை (Special Relativity) ஒளியின் வேகத்தை நெருங்கும்போது பல பைத்தியக்காரத்தனமான பௌதீக மாற்றங்கள் நடக்கும் என பயமுறுத்தியது. (அவையெல்லாம் உண்மையிலேயே நடக்கின்றன என பிறகு நிரூபணமானது) கடைசிக் கட்டுரை (Mass-Energy equivalence ) பொருட்கள் எல்லாமே வெறும் சக்தியால் ஆனவை என்றதுடன், சூரியனுக்குள்ளே என்ன நடக்கிறது, அணுகுண்டு உருவாக்குவது எப்படி என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தது.

அவற்றைப்பற்றிய ஒரு தெளிவான சுவாரஸ்யமான அனிமேஷன் வீடியோ இதோ:


மற்ற காணொளிகள்

ஆப்பிள் எப்படி விழுகிறது? பூமி சூரியனை எப்படி சுற்றுகிறது? சந்திரன், பூமியைச் சுற்றிக்கொண்டே சூரியனை எப்படி சுற்றுகிறது? ஏன் பெரும்பாலான கிரகங்கள் ஒரே திசையில், ஒரே தளத்தில் சூரியனை வலம் வருகின்றன? சந்திரனுக்கு அனுப்பும் விண்கலத்தை எரிபொருள் இல்லாமலேயே பூமிக்கு கொண்டுவருவது எப்படி? இதையெல்லாம் கோலி உருண்டைகளை ரப்பர் ஷீட்டில் உருட்டி உருட்டியே இவர் செய்து காட்டுகிறார். பார்த்து வாயடைப்போம் வாருங்கள். அந்தக் காணொளி கீழே.



அதே ஐன்ஸ்டனின் அடுத்த தியரி (General Theory of Relativity - பொதுச்சார்புக் கொள்கை)  இயற்பியலை மட்டுமன்றி பிரபஞ்சத்தையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையில்லை. வெளியும் காலமும் ஒண்ணு, அது தெரியாதவங்க வாயில மண்ணு என்று சொல்லிவிட்டு, நிறையுள்ள பொருட்கள் இந்த காலவெளியை வளைக்கின்றன, ஈர்ப்பு விசை என்பதே இந்த வளைவால் உருவாகும் ஒரு மாயைதான் என்றெல்லாம் தலைவர் சொன்னார். அன்றுமுதல் இன்றுவரை நூறு வருடங்களாக லேபிலிருந்து விண்வெளி வரை எங்கெங்கோ செய்யப்பட்ட ஆயிரக்காணக்கான பரிசோதனைகளில் ஒன்றில்கூட இது தோல்வியடையவில்லை! தெலுங்குப்பட  ஹீரோவைப்போல ஒத்தையாக நின்று இன்றுவரை அடித்து ஆடிக்கொண்டிருக்கும் அந்தக் கொள்கையை, ஒருவர் வெறும் ரப்பர் ஷீட்டை வைத்து விளக்குகிறார்!



அறிவியலை ரசிப்போம்...

பாவ புண்ணியங்கள்: என் பார்வையில் - 5

(முந்தைய பகுதி இங்கே)

ஏன் மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க வேண்டும்?

முன்னமே குறிப்பிட்டதுபோல கர்மா எனும் எண்ணக்கரு மக்களுக்கு ஒருவிதமான மன திருப்தியை வழங்குவதை மறுக்க முடியாது. சரி, அப்படியான ஒரு திருப்தியை, நம்பிக்கை(hope)ஐ வழங்கும் கருத்துக்களை, (அவை தவறானவையாகவே இருந்தாலும்) ஏன் மெனக்கட்டு சிதைக்க வேண்டும்? சாக்கடைத் தொழிலாளியின் மது பாட்டிலை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு அவனை ஏன் நாறும் சாக்கடையில் குரூரமாகத் தள்ளிவிடவேண்டும்? என சிலர் கேட்கலாம். 

 

என்னுடைய கருத்தில், சாக்கடை நாற்றமடிக்கிறது எனும் உண்மையும், மது ஒரு தற்காலிக, உடலை உருக்கும் ஒரு தீர்வுதான் என்பதும் அந்தத் தொழிலாளிக்கு கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். வேறு வழியில்லாமல், அவன் அதற்குள் இறங்கும்போது அவன் மது அருந்துவதை நாம் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சாக்கடையைப் பற்றி எதுவுமே தெரியாதவனை, அது மிகவும் சுத்தமானது என நம்பவைத்து, நன்றாக குடிக்கவைத்து சாக்கடையுள் தள்ளிவிடுவது மிக மிக குரூரமான செயல். ஆயிரக்கணக்கான யூதர்களை சுத்தமாக குளிக்க வார்க்கிறோம் என நம்பவைத்து விஷவாயு அறைக்குள் அனுப்பிய ஹிட்லரின் செயலுக்கு இது சமமானது. குழந்தைகளுக்கு கர்மா மற்றும் சொர்க்க-நரகங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்போது, நாமும் இந்தக் குரூரத்தைத்தான் செய்கிறோம்.

கண்ணா, இது எப்டி இருக்கு??
அதாவது, எனது கருத்துப்படி, பொய்களின் துணை இல்லாமலே உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலைதான் மிகவும் சிறந்தது. ஆனால், அது எல்லாருக்கும் கைவராது. அதனால், அப்படிச் செய்ய முடியாதவர்கள், மெய்மையின் (reality) கொடுமையை மறக்க ஒரு மாயையை உருவாக்கி அதை நம்புவதில் தவறில்லை. ஆனால், அந்த மாயையே காலப்போக்கில் நம் உலகமாகிவிடக்கூடாது. (The Matrix படத்தில் இந்தக் கருத்தை மிகவும் கற்பனைத்திறனுடன் சொல்லியிருப்பார்கள்) பொய்யை தற்காலிகமாக நம்பும்போது, அடிமனதில் 'எது உண்மை' எனும் பிரக்ஞை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால், தவறான நம்பிக்கைகள் ஒரு புற்றுநோய் போல எமது தெளிவான, லாஜிக்கல் சிந்தனைகளை (logical thinking) முடமாக்கி நம்மை மனரீதியாக குருடர்களாக்கிவிடும் அபாயம் இருக்கிறது.

முடிவுரை

life is random but it's all good cuz so am i tee shirts by randomocity
எனவே, சுருக்கமாகச் சொன்னால், கர்மா அல்லது சொர்க்க நரகங்களின் இருப்புக்கு எவ்வித அறிவியல்ரீதியான, தர்க்கரீதியான அல்லது நடைமுறை யதார்த்தரீதியான  ஆதாரங்களும் கிடையாது. முழுமையான நல்லவனாக வாழ்வதற்கும் கர்மா மீதான நம்பிக்கை தேவையில்லை. மாறாக, 'உலகம் ஒழுங்கற்றது' எனும் எண்ணக்கரு உலக நடப்புக்களை இன்னும் எளிதாக, குறைந்த அனுமானங்களுடன், அறிவியலுக்கும் யதார்த்தத்திற்கும் அருகாமையில் நின்று விளக்குகிறது. இருந்தும், இந்தத் தத்துவங்களை ஆழமாக ஆராய விரும்பாத பொதுமக்கள் ஒருவித மன திருப்திக்காக கர்மாவை நம்பவே விரும்புகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், அப்படி ஒரு தற்காலிக மனத்திருப்தியை அடைந்து மகிழும்போது 'உலகம் ஒழுங்கற்றது' என்பதையும், கர்மா என்பது ஒரு மாயை மட்டுமே என்பதையும் அடிமனதில் இருத்தி வைத்துக்கொள்ளாவிட்டால், இப்படிப்பட்ட நம்பிக்கைகள் எமது தர்க்கரீதியான சிந்தனைத்திறனை முடமாக்கிவிடும் அபாயம் இருக்கிறது. அவ்வளவுதான். 




மேலே குறிப்பிட்டவற்றில் ஏதாவது அறிவியல்ரீதியான, ஆன்மீகரீதியான அல்லது தர்க்கரீதியான பிழைகள் இருந்தால், பின்னூட்டங்களில் தொடர்ந்து கலந்துரையாடுவோம். வாருங்கள்.

பாவ புண்ணியங்கள்: என் பார்வையில் - 4

(முந்தைய பகுதி இங்கே)

மக்கள் ஏன் பாவ புண்ணியங்களை நம்புகிறார்கள்

ஆரம்பத்தில் சொன்னதுபோல உலகில் உள்ள எல்லா மதங்களும் பாவம்-புண்ணியம் எண்ணக்கருவை ஏதோவொருவகையில் கொண்டிருகின்றன. மக்களும் கேள்வி கேட்காமல் கர்மாவை நம்பத் தயாராக இருக்கிறார்கள். உலக நடப்புக்களை கர்மா இல்லாமலே விளக்க முடியுமென்றால், மக்களும் மதங்களும் ஏன் இவ்வளவு சிக்கலான கர்மாவை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்?


என் கருத்துப்படி, இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, மேலே குறிப்பிட்ட "நான் ஏன் நல்லவனாக வாழவேண்டும்?" எனும் கேள்விக்கு ஒரு எளிமையான பதிலை கர்மா மற்றும் சொர்க்க-நரக எண்ணக்கருக்கள் அளிக்கிறன. இன்னொன்று, இந்த ஒழுங்கற்ற  உலகில் ஒரு மறைமுக ஒழுங்கு இருப்பதாக மக்களை அவை நம்பவைக்கின்றன. இங்கே காணக்கூடிய அநீதிக்களை அவை நியாயப்படுத்துகின்றன. அதாவது, அநீதிக்களுக்கு தண்டனையும் புண்ணியங்களுக்கு வெகுமதியும் பலருடைய வாழ்க்கையில் கிடைப்பதில்லை. "ஏன் இப்படி?" என குமுறும் உள்ளங்களுக்கு, "இதற்கெல்லாம் பலன்கள் அவர்கள் இறந்த பிறகு கிடைக்கும்" என ஆறுதல் கூறுகின்றன.

உதாரணமாக, ஒரு நல்லவன் நன்றாக வாழும்போது "அவனுடைய புண்ணியங்கள் அவனை வாழவைக்கிறன" என்கிறார்கள். அதே நல்லவன் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் "உன் புண்ணியங்களுக்கு அடுத்த பிறவியில் / சொர்க்கத்தில் வெகுமதி கிடைக்கும்" என்றோ, அல்லது "உன் கர்மா, உன் பிள்ளைகளை நன்றாக வாழவைக்கும்" என்றோ சப்பைக்கட்டாக ஆறுதல் கூறுகிறார்கள். அதேசமயம், ஒரு கெட்டவன், தற்செயலாக தோல்விகளை சந்திக்கும்போது, "அவன் அப்போ செஞ்சதுக்கு இப்போ பலன் கிடைக்குது பாரு" என குதூகலிக்கிறார்கள். அதே கெட்டவன் சுகபோகமாக வாழும்போது "இவனுக்கெல்லாம் நரகத்துல இருக்குது பார்", "இவனோட பிள்ளைங்க நாசமா போவாங்க" என்றெல்லாம் சப்பைக்கட்டாக சபிக்கிறார்கள்.


இதை வைத்துப் பார்த்தால், கர்மா அல்லது சொர்க்க-நரக நம்பிக்கைகள், பொதுமக்களுக்கு ஒரு அற்பமான மனத்திருப்தியை மட்டுமே வழங்குவதைக் காணலாம். மேலே குறிப்பிட்டவற்றில் எந்தவொரு லாஜிக்கும் இல்லை என்பது உங்களுக்கு எளிதாகப் புரியும். ஆனால், சாதாரண மக்களுக்கு லாஜிக் தேவையில்லை, வெறும் அற்ப மனதிருப்தியையே அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது, இந்த நம்பிக்கைகள் ஒரு போதைப்பொருள் மாதிரி. சாக்கடையின் நாற்றம் எனும் உண்மையை தாங்கிக்கொள்வதற்காக ஒரு சாக்கடைத் தொழிலாளி மது அருந்துவதைப் போல, the world is unfair அல்லது உலகம் ஒழுங்கற்றது எனும் உண்மையை மறைக்க, தாங்கிக்கொள்ள, மக்கள் கர்மா எனும் மாயையை லாஜிக் பார்க்காமல் நம்புகிறார்கள். "Religion is the Opium for people" (மதம் மனிதனுக்கு ஒரு போதைப்பொருள்) எனும் கருத்துக்கமைய, பல மதங்களும், மக்களின் திருப்திக்காக, இவ்வகையான கேள்விகளுக்கு திருப்தியான பதிலை தருவதற்காக, பாவ-புண்ணிய எண்ணக்கருவை ஏதோ ஒருவகையில் உள்ளடக்கியிருக்கின்றன.

ஏன் கர்மா எனும் எண்ணக்கரு நிராகரிக்கப்படவேண்டும்?


இவற்றைப் பார்த்தால், சிக்கலான ஆன்மா & கர்மா எண்ணக்கருக்களின் தேவை இல்லாமல் உலகின் நிகழ்வுகளை விளக்க முடிகிறது. ஆனால், கர்மா கிடையவே கிடையாது என்று அடித்துச் சொல்ல முடியாது. ஒரு கொள்கை தேவையில்லை என்பதும், அந்தக் கொள்கையே தவறு என்பதும் ஒன்றல்லவேஎனவே, இந்த இடத்தில், அறிவியலின் அடிப்படை விதியான Occam's Razor ஐ பயன்படுத்தலாம். ஒரு செயற்பாட்டை விளக்கக்கூடிய இரண்டு சாத்தியமான கோட்பாடுகளில், இரண்டு பக்கங்களுக்கும் ஆதாரங்கள் இல்லாவிட்டால், அவை இரண்டிலும் மிக எளிய, குறைந்த அனுமானங்களை எடுக்கும் கோட்பாட்டையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அறிவியலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் Occam's Razor விதியாகும். (மேலும் விபரங்கள் இங்கே)  இதன்படி, சிக்கலான, அதிக அனுமானங்களுடன்கூடிய கர்மா எனும் எண்ணக்கருவை விட்டு, உலகம் ஒழுங்கற்றது எனும் கொள்கையையே ஏற்றுக்கொள்ள முடியும். 


பாவ புண்ணியங்கள்: என் பார்வையில் - 3

(முந்தைய பகுதி இங்கே)

நான் ஏன் நல்லவனாக வாழவேண்டும்?

இப்படி ஒழுங்கற்ற உலகத்தில், நம் பாவங்களுக்கு தண்டனைகளும் புண்ணியங்களுக்கு வெகுமதிகளும் கிடைக்காது. அவற்றை எதிர்பார்க்கவும் முடியாது. "அப்படியானால், நான் ஏன் நல்லவனாக இருக்கவேண்டும்? ஏன் கெட்டவனாக வாழக்கூடாது?" எனும் கேள்வி இப்போது எழலாம். இந்தக் கேள்வியை, தண்டனை, வெகுமதி எனும் சிறுபிள்ளைத்தனமான பார்வையில் அணுகாமல், கொஞ்சம் பக்குவப்பட்ட மனநிலையில் அணுகலாம். 

கொஞ்சம் யோசித்தால், தண்டனைக்குப் பயந்தும், வெகுமதிகளை எதிர்பார்த்தும் நல்லவர்களாக வாழ்பவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது புரியும். செய்யும் தவறுகளுக்கு தண்டனை தரமாட்டார்கள் என்று தெரிந்ததும் உடனே தேடித்தேடி தவறு செய்யக்கூடியவன் ஒரு மனிதனா? நீங்கள் கர்மாவுக்கும், அது தரும் தண்டனைகளுக்கும் பயந்து மட்டும்தான் நல்லவர்களாக இருக்கிறீர்களா? இல்லைதானே?

இந்த உலகத்தில் எல்லாரும் சமம், எல்லாரும் எனக்குச் சமம் எனும் கருத்தை மனசாட்சிக்குள் வைத்துக்கொண்டு சிந்தித்தால், குற்றவுணர்ச்சி, சுய ஒழுக்கம் போன்ற உணர்வுகளே தன்னிச்சையாக நம்மை நல்லவனாக வைத்துக்கொள்ளும். அடுத்தவனை துன்புறுத்தி அடையும் குறுங்கால இன்பத்தைவிட, நம்மால் அடுத்தவன் அடையும் இன்பத்தை பார்க்கும் சந்தோஷம் பெரிய போதை என்பதை உணர்ந்தவர்களுக்கு கர்மா, சொர்க்க-நரக பூச்சாண்டிகள் தேவையில்லை. பக்குவப்பட்ட மனச்சாட்சிக்கு மட்டுமே கட்டுபட்டு வாழ்பவனை ஒருவகையில் நல்ல மனிதன் என்று சொல்லிக்கொள்ளலாம்.


பாவ புண்ணியங்கள்: என் பார்வையில் - 2

(முந்தைய பகுதி இங்கே)

கர்மா எனும் எண்ணக்கரு தேவையற்றதா?

கர்மா (அல்லது பாவ புண்ணியங்கள்) எனும் கொள்கையானது உலகின் நடப்புக்களை இவ்வாறு விளக்குகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு என்றாவது ஒருநாள் பதில் கூற வேண்டும். ஒருவன் செய்த பாவங்களுக்கு தண்டனைகளையும் புண்ணியங்களுக்கு வெகுமதிகளையும் அவன் இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ (இந்திய மதங்களின்படி) அல்லது சொர்க்க-நரகத்திலோ (ஆபிரகாமிய மதங்களின்படி) கட்டாயம் பெற்றுக்கொள்வான்.


இதில், "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பது இதே பிறவியில் நடப்பதில்லை என்பது கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது. உலகமெங்கும் வறுமையால் அடிபட்டு, மானத்தை இழந்து தற்கொலை செய்பவர்களும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் அப்பாவிகளும் ஒன்றுமறியாக் குழந்தைகளும் செய்த வினைகளுக்கான பயனைத்தான் அனுபவிக்கின்றன என மனிதத்தன்மை எஞ்சியிருக்கும் எவராலும் சொல்ல முடியாது. 

அதேபோல, கொடுமைகள் செய்த அனைவரும் தண்டிக்கப்படுவதில்லை என்பதும் கண்கூடாகத் தெரியும் ஒன்றுதான். நம் ஹிட்லர் கூட வலியில்லாமல், தன்மானத்துடன் தற்கொலை செய்துகொண்ட அதேவேளை, எந்தத் தவறும் செய்யாத Alan Turing (கணினியியலின் தந்தை), சமூகத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல், தற்கொலை செய்துகொண்டார். பலகோடி பேரை கொலைசெய்த ஜோசப் ஸ்டாலின் ராஜா மாதிரி வாழ்ந்து, மூளையில் நரம்பு வெடித்து தூக்கத்தில் வலியற்று இறந்தார். யாரையும் கொல்லாத எனது சொந்தக்காரர் ஒருவரும் அதே மாதிரித்தான் இறந்தார். அறிவியல் உண்மைகளைக் கூறிய பலரும் சித்திரவதைப்படுத்தப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதும், மதம் மாற மறுத்த பல அப்பாவிகள் கொடுமையாக சித்திரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதும் வரலாறு.

தன செயல்களின் பயன்களை ஒருவன் இறப்பின் பின்னர் (சொர்க்க-நரகத்தில் அல்லது மறுபிறவியில்) அனுபவிக்கிறான் என்பதை நம்புவதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. அறிவியலின் பார்வையில் இறப்பு ஒரு முற்றுப்புள்ளி மட்டுமே. 'இறப்பின் பின்னர் இருப்பது என்ன?' என்பது யாருக்கும் தெரியாததால் (அறிவியலின் பார்வையில் அந்தக் கேள்விக்கே அர்த்தம் இல்லாததால்), கர்மாவை நம்புபவர்கள் செயல்களுக்கான தண்டனைகளும் வெகுமதிகளும் இறப்பிற்கு பின்னர் இருப்பதாக சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். மரணத்தைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம்.

சரி, அப்படியே கர்மா முற்றுமுழுதாக நம்பத்தகுந்தது என்றால், இத்தனை மெனக்கட்டு, செலவுசெய்து ஒரு நீதித்துறையையும் காவல் துறையையும் நடத்தத் தேவையில்லையே? யார் செய்யும் தவறையும் துப்புத்துலக்கவோ, தண்டனை வழங்கவோ அவசியமில்லையே? கர்மாவே அவர்களை பார்த்துக்கொள்ளும் என விட்டுவிடலாமே? உலகிலுள்ள எல்லா நடைமுறை அமைப்புக்களும் கர்மாவை கண்டுகொள்ளாமல் செயற்படுவது ஏன்?

எனவே, மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து, கர்மா, மற்றும் பாவ புண்ணிய கோட்பாடுகள் யதார்த்த உலகத்தில் வேலை செய்வதில்லை என்பதும், அவை ஒருவித மாயை மட்டுமே எனவும் கொள்ள முடியும்.

கர்மாவுக்கு மாற்றாக இருக்கும் கொள்கை எது?


The World is Random என்பதுதான் மாபெரும் உண்மை. அறிவியலுடன் ஒத்துப்போகும் 'உலகம் ஒழுங்கற்றது' எனும் கருத்தை, கர்மாவுக்கு மாற்றாக கருதலாம். நல்லவன் கெட்டவன் என பாகுபாடு பாராமல், எல்லாருக்கும் நல்லதும் கெட்டதும் நடக்கிறது எல்லாம் கண்டபடி நடக்கிறது. இதற்குள் வலிந்து ஓர் அர்த்தத்தை தேடுவதும், கர்மாவை முயன்று இதற்குள் நுழைப்பதும் அர்த்தமற்றது என்பதே என்னுடைய கருத்து. The World is Unfair என்பதும் ஒருவகையில் உண்மைதான். இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் நல்லவர்கள், குறிப்பாக அப்பாவிகள் முன்னேற முடிவதில்லை.. நசுக்கப்படுபவர்களுக்கு சொர்க்கமும், நசுக்குபவர்களுக்கு நரகமும் கிடைக்கும் என்பது வெறும் ஆறுதல் வார்த்தைகள் மட்டும்தான். நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்வதே உலகத்திடமிருந்து நாம் தப்பக்கூடிய வழி என்பதை உணர்தல், கர்மாவில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பதை விட யதார்த்தத்துக்கு நெருக்கமானது. 


பாவ புண்ணியங்கள்: என் பார்வையில் - 1

குறிப்பு:  கர்மா எனும் வார்த்தை பொதுவாக இந்திய மதங்களில் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா மதங்களிலும் இதற்கு இணையான ஒரு எண்ணக்கரு (concept) காணப்படுகிறது. பின்வரும் கட்டுரையில் "தனது பாவ புண்ணியங்களுக்கான விளைவுகளை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் (இப்பிறவியிலோ, மறுபிறவியிலோ, சொர்க்க நரகத்திலோ) அனுபவிக்க வேண்டும்" எனும் எண்ணக்கருவையே கர்மா என பொதுவாக விளித்துள்ளேன். எனவே, இக்கட்டுரை எல்லா மதங்களுக்கும் பொதுவானது.




'மனிதனின் பாவ புண்ணியச் செயல்களுக்கு தண்டனைகளும் வெகுமதிகளும் கிடைக்குமா?' எனும் தலைப்பு பலநூறு ஆண்டுகளாக, பல்வேறு நாகரீகங்களின் தத்துவஞானிகளாலும் பல்வேறு மதங்களாலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கர்மாவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன்கர்மா எனும் எண்ணக்கரு என்னென்ன நடப்புக்களை விளக்குவதற்கு தேவைப்படுகிறது என்பதையும் அவற்றை கர்மா (பாவ-புண்ணிய கொள்கைகள்) இல்லாமலே எப்படி விளக்கலாம் என்பதையும், கர்மா எனும் கொள்கையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை Occam's Razor முறையின் மூலம் எப்படி முடிவுசெய்யலாம் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் ஏன் கர்மாவை நம்ப விரும்புகிறார்கள் என்பதையும் பற்றிய எனது புரிதல்களை இங்கே விரிவாக முன்வைத்திருக்கிறேன்.

மதங்களின் பார்வையில் புண்ணிய பாவங்கள்


     

ஆபிரகாமிய மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களில் இறந்தவர்கள் 'தீர்ப்பு நாள'ன்று (Judgement day) உயிர்ப்பிக்கப்பட்டு அவரவர் பாவ, புண்ணியங்களுக்கேற்ப சொர்க்க நரகத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை காணப்படுகின்றது. இந்து மதத்தின் பல்வேறு கொள்கைகளுள், சொர்க்க நரகம் பற்றிய கருத்துக்களுடன், இறப்பவர்கள் அவர்களது பாவ புண்ணியங்களுக்கு (கர்மா) ஏற்றபடியான விளைவுகளை இப்பிறவியிலோ அல்லது மறுபிறவியிலோ அனுபவிப்பார்கள் என நம்பப்படுகின்றது. பௌத்த மதமும், கர்மாவுக்கேற்பவே மறுபிறவிகள் நிச்சயிக்கப்படுகின்றன எனவும் மறுபிறவிச் சுழலை விட்டு வெளிவருவதே வாழ்வின் நோக்கம் எனக் கூறுகிறது. 

அதாவது, பொதுவாக எல்லா மதங்களுமே மனிதன் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு தண்டனைகளும் வெகுமதிகளும் இந்தப் பிறவியில் கிடைக்காவிட்டாலும் மரணத்துக்குப் பின்னர் கண்டிப்பாக கிடைக்கும் என உறுதி கூறுகின்றன. மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவும், 'உலகில் சந்தோஷங்களும் துன்பங்களும் ஏன் ஏற்படுகின்றன?' எனும் கேள்விக்கு விடையளிக்கவுமே மதங்கள் இவ்வழியைக் கையாளுவதாக சொல்லப்படுகிறது.

கர்மாவைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?


உண்மையைச் சொன்னால், கர்மாவை அறிவியல் ரீதியாக அணுக முடியாது. அறிவியலின் கோட்பாடுகளைப்போல், கர்மா எனும் கோட்பாடு அளவிடக்கூடிய எந்த விளைவுகளையும் தீர்மானமாக கணித்துச் சொல்வதில்லை. (The theory of Karma doesn't produce any measurable and falsifiable predictions) அத்துடன், அறிவியல் அனைவருக்கும் பொதுவான விதிகளைப்பற்றித்தான் ஆராய்கிறது. பாவம், புண்ணியம் என்பதும் தர்ம நியாயங்களும் ஆளுக்கு ஆள், சமூகத்துக்குச் சமூகம், காலத்துக்குக் காலம் மாறுபடும். மாற்று மதத்தினர்மீது போர்தொடுத்து அல்லது கழுவிலேற்றி சித்திரவதைப்படுத்திக் கொல்வது ஒருகாலத்தில் புண்ணியமாக கருதப்பட்டது. இன்று அது பாவமாகக் கருதப்படுகிறது. இப்படி நிலையற்ற விஷயங்கள் பற்றி அறிவியல் ஆராய்வதில்லை என்பதால், கர்மாவை ஆராயும்படி அறிவியலை வற்புறுத்த முடியாது.


Monday, 12 January 2015

மகாபாரதம் புனிதமானதா?


முன்குறிப்பு:

மிகவும் தொன்மையான, மகாபாரதத்தின் புனிதத்தன்மைக்கு எதிரான கருத்துக்களை இப்பதிவில் முன்வைத்திருப்பதைக் கண்டு பலரும் எரிச்சல் அடையலாம். எனக்கு மகாபாரதத்தின் மீதோ, ஆரியர்கள் / பிராமணர்கள் மீதோ எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துவிட்டு எல்லாரும் திடீரென மகாபாரதத்தை பாராட்டத் தொடங்கிவிட்டதால், பெரும்பாலானவர்கள் கவனிக்கத்தவறும் அதன் முரண்பாடுகளைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்.

உண்மையில், உலகின் மிக நீண்ட கவிதையாக கருதப்படும் மகாபாரதத்தின் மீது, எனக்குப் பாரிய மதிப்பும் விருப்பமும் உண்டு. ஹோமரின் கிரேக்கக் காவியங்களான இலியட், ஒடிசியைப் போன்று ஒப்பற்ற தொன்மையும், இலக்கியச்செறிவும், அபாரமான கதையமைப்பும் கொண்டது மகாபாரதம் என்பதை அறிந்துள்ளேன். எட்டு, ஒன்பது வயதில் முதன்முதலில் மகாபாரதத்தின் சுருக்கம் படித்ததிலிருந்து அதன் கற்பனையின் ஆழமும், போர்களை, சூழ்ச்சிகளை விபரிக்கும் பாங்கும் என்னைக் கவர்ந்திருந்தன. சிறுவயதில், என்னை அர்ஜுனனாக கற்பனை செய்துகொண்டு மகிழும் அளவுக்கு மகாபாரதம் என்னை அன்றும், இன்றும் வசீகரித்திருக்கிறது.

இருந்தாலும், சிறந்த காவியமான மகாபாரதம் உண்மையில் புனிதமானதா? வேதகால அரசர்களின் க்ஷத்திரிய தர்மங்களை மட்டுமே பேசும் மகாபாரதம் கூறும் தர்மங்களுக்குள்ளேயே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி,  "குரு" நாட்டில், இரு அரச வம்சங்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சனையை தீர்ப்பதற்காக பல்லாயிரம் பேரைப் பலியெடுத்த யுத்தம்தான் குருஷேத்திர யுத்தம் எனும் வரலாற்றின்  பின்னணியில், என் சிற்றறிவுக்கு உட்பட்டவரை இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன். அதாவது, என்னை வசீகரித்த, சிறந்த காவியமான மகாபாரதத்தை ஒரு புனிதமான நூலின் ஸ்தானத்துக்கு ஏன்  உயர்த்தக் கூடாது என்பதற்கான காரணங்களை இங்கே எழுதியிருக்கிறேன். இனி பதிவுக்குள் போகலாம்...

Sunday, 11 January 2015

The Pillars of the Earth – Ken Follett (Book Review)


The Pillars is a captivating novel with various themes. It features a plot of ambition, romance and courage woven around the construction of a cathedral during the civil war in medieval England. It’s a mammoth epic novel, with over a thousand pages long and a storyline covering three generations. However, the novel is alive with vivid emotions of love and lust, thrilling with battles, twists and turns. Follett unfolds the story of this highly informative novel in a narration that is so absorbing such that one wouldn’t put it down once he started reading. As we read the novel, we live the medieval life with characters, we design the cathedral with Jack, we fall in love with Aliena and fight battles with Richard. This book can be called as an historical epic thriller and after I read the book, it set a new standard for my reading choices.


The story is set in 11th century medieval England of political instability that is famously referred as 'The Anarchy' in European history. Heir to the throne has died in a ship accident and King (Henry I) has passed away shortly. With no rightful heir, civil war breaks between the forces of two royal relatives. Without a monarch, administration and justice had fallen to ruin and power has been seized by greedy barons. In these turbulent times, a magnificent cathedral is being built, one like which England has never seen before. A new style architecture (Gothic) emerges with stunning beauty through several new engineering challenges. As the cathedral rises, its village slowly evolves into a town around it, resisting the injustice of neighboring barons. In such a background, a long story of family drama unfolds, intense with emotions of love and lust.


Story & Narration


The design of the cathedral built in the book is based on
Salisbury Cathedral, England
Philip is a bright and ambitious, yet humble and forgiving Christian monk who gets appointed as the new prior (father) of Kingsbridge priory (town church). With old church burnt to ashes in an apparent accident, he is determined to build a new cathedral and to restore order in the corrupted priory of Kingsbridge. Tom Builder is an ambitious master stonemason, attracted by the puzzling complexity of cathedral building. Tom starts living together with a widow and her peculiar son, Jack. With time, Jack grows into a brilliant architect & engineer, travels lands of Spain and France and gets inspired by the new Gothic architectural style. Aliena is a beautiful, confident and smart noblewomen (girl) who has lost her father and her earldom (castle) to a villain named William and brutally raped by him at youth.

Sadistic nobleman William, the wily bishop Waleran and few others are portrayed as antagonists. They use the chaotic period of civil war to unleash injustice against Father Philip and Aliena. However, Jack and Aliena fall in love and Jack soothes her mental wound about lovemaking, caused by the rape. Eventually, with endurance, she rises again as a noblewomen and regains her castle while Jack completes the new church in a novel Gothic architectural style.

The novel is filled with enough electrifying elements. With civil war and building of a cathedral as backgrounds, tight webs of political power games are spun along the novel supported by popular historic events. In addition, there is the cathedral architecture: a impressive mix of delicate art, challenging engineering and magnificence of the project itself. To add spice to the feast, thrilling wars, raids and invasions are placed throughout the storyline to maintain a steady pace.

Analysis


The author, Ken Follett is not a religious man, but an atheist. Yet, he does not stick to criticizing the church and god. Instead, he shows the church from a medieval common man’s view. However, the author’s nature reflects strongly in Jack, one of the leading characters. Jack, just like Follett, is skeptic about Christianity, but is in love with cathedral architecture. To contrast him, Philip, another leading character is portrayed as a ‘true’ monk, not as some corrupted Christian clergy.

Underlying to the story, the novel explores a crucial theme: the frequent clash between the laws of nature, religion and state. Jack and Aliena are together in deep and matured love, yet they are not allowed to live together by the laws of church. Church’s law and state’s laws keep clashing throughout the civil war as indicated when King Stephan comments to a Bishop “I’d prefer a monk to dress like a monk, in rags. Not like a king in tunics”, pointing out a monk's expensive clothes.

Interior of Salisbury cathedral
Apart from the thrill and deep emotions, the novel is highly informative. On the flow, the reader would be able to realize many aspects of the medieval society. One would get to know about the hierarchy of social classes of medieval England: royalty, earls, barons, merchants and peasants and the classes of church: novice, monk, prior, bishop, archdeacon and archbishop. Reader gets familiar with cathedral architecture: Gothic and Romanesque styles, arches, vaulting, buttresses, nave, aisles, gallery, transepts…etc. The book is packed with social details such as with the marriage laws, habits of people, economy, society and other features of medieval life. Before reading this book, I never knew that there were humble monks in Christianity as in Buddhism and I had no idea about the engineering purpose of arches. All this information is presented through a gripping storytelling, such that the book won't be boring like a textbook, even to those who have no interest in architecture or politics. The book actually enlightened me on many levels and inspired me to read more about cathedral architecture and medieval English society.


Drawbacks

On the other hand, the novel has few minor drawbacks, which I’m sure nobody would care much about. The characters, though very lively, are closer to either end of the good-evil spectrum, unlike in reality. Although the novel is widely praised by historians and critics for its accuracy in portraying medieval lifestyle, I felt that the society seems bit too matured to be real: for example, people and church judge a man by his present own actions, ignoring his or her past and misgivings of his parents. This is evident that after Jack’s mother is declared as a witch by the church and after Jack insulted Father Philip, he is later given the job of master builder of cathedral by Philip himself, purely for his skill and intellect. As such matured behavior cannot be observed even in today's society, I suppose it wouldn't be possible in 11th century. However, the author has done an appreciable task of filling the story perfectly into a frame of popular history events such as sinking of White Ship, civil war, Battle of Lincoln and assassination of Thomas Becket. Therefore, these minor drawbacks can be concluded negligible when considering the splendor of the narration.

Interior of Salisbury, showing the pointed vaults and pointed arches of Gothic style


My Personal Views


As said, I have a passion for huge buildings. Somewhat like Follett or Jack, I am attracted to the architecture of huge Hindu kovils rather than to the deities inside. Architecture seems a challenge in itself. At that era, when building an impossibly tall buildings with heavy granite stone, masons had to devise ways to divide and conduct the massive forces of weight to the earth and make the tall, unstable building resist hurricanes & earthquakes for 800 years, all without an understanding of physics, without knowing what really a force is. Beyond this engineering challenges, the result must turn out be stunningly beautiful at first sight, since one cannot build a huge, tall ugly building at such cost and boast about its engineering. As mentioned in book, cathedrals were the largest, tallest, most expensive and most complex buildings ever built by Christians and each took generations to build. And that was because, the monarch and the people could justify such expenditure and the time spent only through their blind faith on god.

As a note about the characters, I loved this novel for those two characterizations. I personally like and respect two kinds of people: ones who are ambitious and work with god in their heart, like Philip and ones who are ambitious and reject the existence of god, yet live a good lively, tasteful life. The two leading characters were exactly the type I loved, so I was naturally drawn into the novel.


Verdict


The novel is huge, it took me 15 days to read it to the end. However it was completely worthy for the time. Each time I picked the book, I couldn't keep it down, and on several days, I found myself reading frantically in nights up to 2 am and in mornings as soon as I woke up in bed. On some days, I had to refrain myself from touching the book, afraid I will not be able to stop reading once started and I won’t be able to do my routine works. I took the book from the library on an impulse, but it seems I've found a gem. I’m looking forward to buy this book for my collection.

It’s a novel that’s alive. As I read, I found myself drifting into the world it created as intensely as I was dreaming. The feelings felt by the characters: shock, happiness, lust, sorrow, despair, frustration…etc. manipulated me and I was truly depressed in life for few days when the characters lost all hope. However, it should be mentioned, this book is strictly for adults due to the detailed descriptions (though enjoyable) of certain scenes and activities. :-D (But I believe, anybody who dare reading a 1000 page English novel would be matured enough to read anything) ‘The Pillars’ presents a lively tale, evoking series of emotions & collection of experiences and I bet any good reader would love this after reading.


A Note on the Author

Ken Follett
Ken Follett is a Welsh author, popular for his historical epic fiction works set on different historical eras. His bestselling books include The Pillars of the Earth (set during English civil war), its sequel World Without End (set during the first outbreak of Plague in medieval England) and The Century Trilogy (Three books: Fall of Giants, Winter of the World, Edge of Eternity - each set in the 20th century during First World War & Russian Revolution, Second World War and the Cold War respectively).

In each of the above books, the story is told by following the life of few families of different social statuses with different belief systems, sometimes living in different countries. This method proves to be highly effective in describing the impact of historical events in various levels of society and in describing the beliefs and practices held in those levels of the society. One major drawback of the other historical fiction I've read (Ponniyin Selvan, Sandilyan's novels, Mahabaratham) is their story is spun mainly around the royal class. How the royal events and decisions affect the people is usually ignored in such novels. Ken Follett clearly scores above those novels in overcoming that drawback.

Also, Follett is widely praised for the historical accuracy in his novels. He weaves a brilliant drama on the frame of historical events, which is an almost-impossible task in itself. Not only that, he leaves the real historic characters (English kings, Stalin, Churchill..etc) intact with their own characters and shows their different faces through the conversations between the fictitious characters of the novel. By such techniques, he succeeds in presenting a detailed cross section of the historic era and the historic characters as seen from different perspectives.

Follett was writing a series of bestselling yet stupid thrillers like Dan Brown until he suddenly changed his course by writing The Pillars when he was 40 years old. The Pillars and the subsequent historical novels achieved immense success as record-breaking bestsellers. Now, at his 60th age, he continues to write such epic historic novels.

DISCLAIMER

மேலே சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா அவசரப்பட்டு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடவேண்டாம். பின்னூட்டப்பெட்டிக்கு வாங்க, பேசலாம். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.